அசாத் சாலியின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பிணையில் விடுவிக்குமாறு கோரி, அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக  பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்த சாட்சியங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என  அவரது சட்டத்தரணிகள் முன் வைத்துள்ள வாதத்துக்கு இன்று சட்ட மா அதிபர் சார்பில் பதிலளிக்கப்பட்டது.

அசாத் சலி விவகார வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே அவரது பிணை கோரிக்கை நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

You May also like