சந்தையில் பருப்பு விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பருப்பு கிலோ விலை 250 ரூபாவாக உள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கனடாவில் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் தாக்கம் இலங்கை சந்தையில் விலை அதிகரிப்பை ஏற்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.