கேஸ் விலை கூடுமோ? பேச்சு ஆரம்பம்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்கும்படி கேஸ் நிறுவனங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன.

நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண இதனை இன்று செவ்வாய்க்கிழமை ஊடகமொன்றுக்குத் தெரிவித்தார்.

உலக சந்தையில் கேஸ் விலை துரிதமாக அதிகரித்திருப்பதைக் காரணங்காட்டி இந்தக் கோரிக்கையை அந்நிறுவனங்கள் முன்வைத்திருப்பதாவும் ஆனால் இந்த கோரிக்கை தற்போது கலந்துரையாடல் மட்டத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like