கேகாலை பிரதி மேயர் கோவிட் தொற்றினால் பலி

கேகாலை மாநகர பிரதி மேயர் லலித் ஜயசாந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த நாட்களாக கண்டி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

2006ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருந்துவரும் அவர் 2018ம் ஆண்டில் இரண்டாவது முறையாக மாநகர சபை பிரதி மேயராகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like