கொழும்பு மருத்துவமனையில் குண்டு- இதுதான் திட்டமா? திடுக் தகவல்கள்

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றின் கழிவறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்ட கைக்குண்டு பற்றிய திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி இந்தக் குண்டு நுளம்புச் சுருள் உதவியுன் வெடிக்க வைக்க திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு – நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து இருந்து இந்தக் கைக்குண்டு கைப்பற்றப்பட்டது.

எவரால் இந்தக் கைக்குண்டு கொண்டுவரப்பட்டது என்பது பற்றி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விசாரணைகள் தொடர்கின்றன.

You May also like