சிறப்பாக செய்தது தென்னாபிரிக்கா;T20 தொடரை கைப்பற்றியது!

இலங்கை அணியுடனான இருபதுக்கு இருபது தொடரை, தென் ஆபிரிக்க அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் ஊடாக, தொடர் தென் ஆபிரிக்க வசமானது.

தென் ஆபிரிக்க அணியுடனான மூன்றாவதும், இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிக பட்சமாக ஓட்டங்களாக 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்திய வேறு எந்தவொரு வீரரும் போட்டியில் சிறந்த முறையில் பிரகாசிக்கவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி, 14.4 ஓவர்களில் 121 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது.

தென் ஆபிரிக்க அணி சார்பில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 56 ஓட்டங்களையும், குயின்டன் டி காக் 59 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.

You May also like