ஆளுநர் பதவியை இன்று ஏற்பார் அஜித்!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் இன்று புதன்கிழமை பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பதவியை பெற அவர் முன்னர் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார்.

2005ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையும் அவர் மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like