மாணவர்களுக்கு தடுப்பூசி;இன்று இறுதி முடிவு வெளியாகும்!

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்றைய தினம் (15) நடத்தப்படும் பேச்சுவார்த்தையின் பின்னர் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் இருவேறு கருத்துக்கள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

12 முதல் 18 வயது வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது மற்றும் தரம் ஒன்று முதல் 6 வரையான மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து இருவேறு கருத்துக்கள் காணப்பட்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.

You May also like