அடுத்தவாரம் புதுக்கட்டுப்பாடுகளுடன் நாடு திறப்பு?

அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

புதிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இறுதித்தீர்மானம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் நாடு திறக்கப்பட்டாலும் மறு அறிவித்தல் வரை மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து வரையறுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

You May also like