லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக இதுவரை முறைப்பாடு இல்லை?

சிறைச்சாலைகளுக்குள் சென்று அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அச்சறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டு தற்போது சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சுப் பதவியையும் இழந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது இதுவரை எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனை Tamil.Truenews.lk இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

எனினும் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May also like