லொஹான் ரத்வத்த இராஜினாமா!

சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதி செய்தது.

இதேவேளை, அநுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை தனது அமைச்சு பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலியிலிருந்து பணிப்புரை விடுத்திருந்தார்.

தொலைபேசியூடாக லொஹானை தொடர்புகொண்ட பிரதமர் இவ்வாறு பணித்துள்ளார்.

.

You May also like