கொழும்பு மருத்துவமனையில் குண்டு-தமிழ் இளைஞன் கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி லங்கா ஹோஸ்பிட்டன் என்ற தனியார் மருத்துவமனையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு விவகார விசாரணையில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த நபர் அந்த வைத்தியசாலைக்கு அருகே இடம்பெறும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் வந்தவர் என்பதோடு திருகோணமலை – உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது.

எவ்வாறாயினும் விமானப்படைத் தளபதி பத்திரண மற்றும் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் லங்கா ஹோஸ்பிட்டலில்தான் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like