அழுத்தம் கொடுக்க வேண்டாம்-தமிழ்க் கைதிகளிடம் நாமல் கோரிக்கை?

(EXCLUSIVE)

தமிழ்க் கைதிகள் இருவரை துப்பாக்கி முனையில் அச்சறுத்திய விவகாரத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பாதிக்கப்பட்ட இரண்டு தமிழ்க் கைதிகளையும் சந்தித்திருக்கின்றார்.

இந்த சம்பவத்தை இப்படியே கைவிடுமாறும், அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அந்தக் கைதிகளிடம் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பணிவுடன் கேட்டுக்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும் அமைச்சர்களான லொஹான் மற்றும் நாமல் உள்ளிட்டவர்கள் மிகநீண்டகாலமாக நெருக்கமானவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like