மற்றுமொரு இலங்கைத் தூதுவர் இராஜினாமா-இன்று நாடு திரும்பினார்

மியன்மாருக்கான இலங்கைத் தூதவராகப் பதவிவகித்த பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்சமயம் அவர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றார்.

இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்களாக கடமையாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க அண்மையில் இராஜினாமா செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like