லொஹான் குறித்து நடவடிக்கை தேவை-சபாநாயகரிடம் கோரிக்கை

தமிழ்க் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறித்து தகுந்த சட்ட நடவடிக்கையை எடுக்கும்படி தேர்தல்கள் ஆணைக்குழு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுக் கூட்டம் இன்று நடந்தபோது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டிருக்கின்றது.

அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சம்பவமானது சட்டத்துறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகக்கருதுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகின்ற சம்பவமாக இதனை அவதானிப்பதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

You May also like