நாடாளுமன்றம் மூடியதால் இவ்வளவு இலாபமா?

கொவிட் தொற்று நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தில் பல்வேறு நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டதன் மூலம் செலவுகள் குறைவடைந்துள்ளன.

இதன் காரணமாக நூறு கோடி ரூபாவரை இதுவரை மீதமாகி இருக்கின்றது என நாடாளுமன்ற உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் பல்வேறு செயற்குழு கூட்டங்கள் வரையறுக்கப்பட்டமை அல்லது இடம்பெறாமை, உணவு விநியோகம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெறும் தினத்துக்கு மாத்திரம் வரையறை செய்தமை மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தியமை போன்ற காரணங்களால் இவ்வாறு நாடாளுமன்ற செலவுகள் குறைவடைந்திருப்பதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

You May also like