அனைத்து குற்றச்சாட்டையும் அடியோடு நிராகரித்தார் லொஹான்!

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சிறைச்சாலை மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நிராகரித்துள்ளார்.
டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.
சிறைகளில் நடக்கும் குற்றங்களை தடுத்த படியினால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தனக்கு முன்பாக வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தை அளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like