84 மரணங்களுடன் 12000ஐ கடந்த கோவிட் பலியெடுப்பு

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,000 தை தாண்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,022ஆக அதிகரித்துள்ளது.

மிக நீண்ட நாட்களுக்கு பின்னர், நாளொன்றில் பதிவாகும் கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 100க்கு குறைவாக நேற்று பதிவாகியது.

அதன்படி நேற்றைய தினம் 84 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியதாக அரசாங்க தகவல் திணைக்கள் கூறுகின்றது.

You May also like