மஹிந்தவின் இராஜினாமாவினை அடுத்து மஞ்சுலவுக்கு பதவி

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் அதன் பின் வருகின்ற வெற்றிடத்திற்காக களுத்துறை மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றவராக உள்ள மஞ்சுல லலித் வர்ணகுமார நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட 08 பேரில் 07 பேர் தெரிவாகியதோடு இறுதியாக அதிக வாக்குகளைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like