ரிஷாட்டின் சட்டத்தரணி ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஷ்புல்லாஹ்வுக்கும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பிருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

சமூக ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து அவர் பணம் பெற்றமை குறித்து விசாரணையும் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இவற்றைப் பற்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவை பேசாமலிருப்பது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.

You May also like