அநுராதபுரம் சிறைக்குள் மனோ கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று முற்பகலில் விஜயம் மேற்கொண்டார்.

முதலில் சிறை அதிகாரிகள் அவரை சிறைக்குள் அனுமதிக்கவில்லை.

இருப்பினும் சபாநாயகரின் உத்தரவுக்கமைய இறுதியில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

You May also like