மஹிந்த நாடு திரும்பியதும் லொஹானுக்கு எதிராக நடவடிக்கை!

இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த, அனுராதபுரம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு நண்பர்கள் குழுவுடன் மதுபோதையில் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவுசெய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளம் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.

இத்தாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த வார இறுதியில் நாடு திரும்பவுள்ளதால், கட்சியின் மத்திய செயற்குழு பிரதமரின் வருகைக்குப் பின்னர் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு பதவியை மட்டுமே இராஜினாமா செய்தார்.

எனினம் தற்போது, மாணிக்கம் மற்றும் ஆபரணத் தொழில்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியைத் தொடர்ந்து வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like