இந்தியாவின் அழைப்பை நிராகரித்த மஹேல;இலங்கையில் அவருக்கு பிரதான பதவி?

இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவிக்கு அழைக்கப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்த்தன அதனை நிரகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக தாம் கடமையாற்ற உள்ள நிலையில் இப்பதவியை ஏற்க முடியாதென மஹேல கூறியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் தற்போது பயிற்றுவிப்பாளராக உள்ள ரவி ஷாஸ்திரியின் ஒப்பந்த காலம் வருகிற T20 உலகக்கிண்ண தொடருக்குப் பின் முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like