89 கைதிகள் விடுதலை – ரஞ்ஜனின் பெயரும் இருக்கின்றதா?

கடந்த 12ஆம் திகதி இருந்த சிறைக் கைதிகள் தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட 89 கைதிகளில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கைதிகள் அனைவரும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளிக்குமாறு எதிர்கட்சித்தலைவர் உட்பட பலரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருந்த போதிலும் அந்தக் கோரிக்கைக்கு இதுவரை ஜனாதிபதி எந்தபதிலையும் அளிக்கவில்லை.

You May also like