சிலமணி நேரம் திறந்த மதுக்கடைகளால் 52 பேர் மருத்துவமனையில்!

திடீரென நாடு முழுவதிலும் மதுபானசாலைகள் கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டதால் மது மருந்திவிட்டு மோதிக்கொண்டு காயங்களுடன் இன்றுவரை பலர் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

மது மருந்திவிட்டு மோதில்கொண்ட சம்பவத்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் 175 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் ஐவர் பெண்கள் என்பதோடு அவர்கள் அனைவரும் கொழும்பைச் சேர்ந்தவர்கள்.

பொறளையில் கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. அவிசாவளை தய்கல பிரதேசத்தில் மனைவியை குடித்துவிட்டு தாக்கியவரை மனைவி திருப்பித் தாக்கியதில் கணவர் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்களும் மதுபானசாலை திறக்கப்பட்டு உடனடியாக வாங்கிப்பருகிய மது காரணமாக பதிவாகியிருக்கின்றன.

You May also like