03ஆவது தடவையாகவும் ஆட்சிக்கு வருகிறார் ஜஸ்டின்

கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும் தொடர்ச்சியாக கனடாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றன.

தேர்தல் வெற்றிகள் இன்னும் உறுதிபடுத்தப்படாத நிலையில், அதிகாரிகள் தொடர்ந்தும் வாக்குகளை கணக்கிட்டு வருகின்றனர்.

இதனிடையே பல கனேடிய ஊடகங்கள், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளது.

கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like