கெட்டகொட மீண்டும் எம்.பியாக பதவியேற்றார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த கெட்டகொட மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அவர் இன்று காலை 10 மணிக்குக் கூடிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இராஜாங்க அமைச்சராக இருந்து தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜித் நிவாட் கப்ராலின் வெற்றிடத்திற்கே மேற்படி கெட்டகொட நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் அவர் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் நாடாளுமன்றப் பிரவேசத்திற்காக தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like