ஆயர் இல்லத்தில் சிலர் பணயக் கைதிகளாக உள்ளனர்?

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க 2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி அரியாசனைத்தைப் பெறும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தேசப்பற்றுடைய ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

அக்கட்சியின் தலைவர் சுகத் ஹேவாபத்திரண நிகழ்வொன்றில் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.

சம்பிக்க ரணவக்கவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கத்தோலிக்க சபையிலுள்ள சில ஆயர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் சில ஆயர்கள் சம்பிக்க ரணவக்கவின் பணயக் கைதிகளாக இருப்பதாகவும், அவர்களில் சிரில் காமினி மற்றும் ரொஹான் டி சில்வா போன்ற அருட்தந்தையர்களும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

You May also like