கண்டியில் குண்டு பீதியை ஏற்படுத்திய இருவர் கைது

கண்டி பிரதேசத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டில் கைக்குண்டு உள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கிய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட தகவல் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, கண்டி பொலிஸாரினால் இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களின் தொலைபேசி தரவுகளை ஆராய்ந்ததை அடுத்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

35 மற்றும் 32 வயதான இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May also like