மைத்திரியுடன் விமல் அணி இன்றிரவு தீவிர பேச்சு;அதிரும் அரசாங்கம்!

கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு அளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்க்கும் ஆளும் கட்சியில் உள்ள 10 தலைவர்கள் இன்று இரவு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள மைத்திரியின் இல்லத்தில் நடந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக விமல் அணியினர் கொழும்பில் நேற்று மாலை கூடி பேச்சு நடத்தினர்.

இந்த நிலையில் விமல் அணி இன்று இரவில் மைத்திரியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like