லொஹானின் வெறியாட்டம் – விசாரிக்க குழு அமைத்தது அரசாங்கம்

அநுராதபுரம் மற்றும் வெலிகட ஆகிய சிறைச்சாலைகளில் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுயாதீனமான விசாரணைகளுக்காக ஓய்வூப் பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

You May also like