அநுராதபுரம் சிறைக்கைதிகள் விவகாரம்-சபையில் இன்று விவாதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மிரட்டியதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் பற்றி நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சிறப்புரிமை பிரச்சினையாக பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்தப் பிரேரணையை முன்வைத்து விவாதிக்க உள்ளார்.

இதற்கான கோரிக்கை சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் பிரேரணை சபாநாயகரிடம் நேற்று கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like