சஜித் அணியிலிருந்து மனோ கூட்டணி வெளியேற்றமா?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தயங்கப்போவதில்லை என்று அந்த கூட்டணியின் தலைவரான மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கின்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழான கூட்டணியில்தான் இணைந்து செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிடம் சில கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும், அவை நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடவிருப்பதாகவும் மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

You May also like