அஜித்திற்கு எதிரான மனு வரும் 07ஆம் திகதி விசாரணைக்கு!

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இந்த மனுவை விசாரிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

இந்த மனுவை முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் தொடர்ந்திருக்கின்றார்.

You May also like