விமல் அணியை சந்திக்க இன்று நேரம் ஒதுக்கினார் மஹிந்த;பகலில் சந்திப்பு!

அரசாங்கத்தில் உள்ள விமல் அணியினருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமரின் அலுவலக அறையில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் ஆளுந்தரப்பில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்கும் தீர்மானத்தை எதிர்த்து விமல் அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May also like