மாகாண சபை தேர்தல் விரைவல்- சட்டமா அதிபரிடம் கருத்து கேட்டது அரசு

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது பற்றி அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

குறித்த தேர்தலை நடத்துவது பற்றி சட்டரீதியிலாக உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள், வழிகள் பற்றி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கேட்டுள்ளார்.

அதன்படி தற்போதைய நிலைமையை ஆராய்ந்து எதிர்வரும் சில தினங்களில் சட்டமா அதிபரின் பரிந்துரை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like