பாடசாலை மீள திறக்கப்படும் திகதி – கல்வி அமைச்சர் நாளை அறிவிப்பார்!

கடந்த ஒன்றரை வருடங்காளக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து கல்வி அமைச்சின் அதிகாரிகளது கவனம் திரும்பியிருப்பதோடு, நாளைய தினத்தில் பாடசாலைகளை மீளத்திறப்பது பற்றி மக்களைத் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டம் கட்டமாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.  இதற்கான பரிந்துரையும் வழிகாட்டலும் அடங்கிய அறிக்கை கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் சுகாதார அமைச்சு கையளித்திருந்தது.

இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

You May also like