மஹிந்தவுடன் சந்திப்பு தோல்வியில்-அடுத்து ஜனாதிபதியுடன் பேச்சு!

ஆளுங்கட்சிக்குள் மீண்டும் அதிர்வை ஏற்படுத்தியிக்கின்ற கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்கப்போகும் திட்டம் பற்றி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் கூட்டணிக்குள் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்திப்பை நடத்தியிருக்கின்றனர்.

அலரிமாளிகையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

சந்திப்பில், சொல்லும் வகையிலான அதிரடி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் சந்திப்பில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் மேற்படி ஒப்பந்தத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பை பிரதமரிடம் நேரடியாகக் கூறியிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியதும் அவரை சந்தித்து இறுதிப்பேச்சு வார்த்தையை நடத்த இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

You May also like