31 வயது மருத்துவரின் உயிரைப் பறித்தது கோவிட்!

கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ஆம் திகதி இவர் தொற்றுக்கு இலக்காகி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 02ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்திருக்கின்றார்.

You May also like