இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர்களை கடனாக கோரும் இலங்கை

இந்தியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் மற்றுமொரு மிகப்பெரிய அளவிலான கடனைக் கேட்டுள்ளது.

நாட்டிற்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தரும்படி இந்தியாவிடம் அரசாங்கம் கேட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா கடனுதவித் திட்டத்தின் பெற்றுக்கொள்ளப்படவுள்ள இந்த கடனுக்கான நிபந்தனைகள் என்ன விதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.

வெளிநாட்டு செலாவணி இருப்பு நெருக்கடி காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கும் அதுதாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் மாற்றுவழியாகவே இந்தியாவின் உதவியை அரசாங்கம் நாடியிருக்கின்றது என சுட்டிக்காட்டப்படுகின்றது.

You May also like