கொழும்பு மருத்துவமனை குண்டு;மேலும் ஒருவர் கைது

இந்த சந்தேகநபர் நேற்று (24) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, திருகோணமலை பகுதியில் வைத்து 22 வயதான இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், கைக்குண்டை தயாரிப்பதற்கு உதவி புரிந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே, இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து கடந்த 14ம் திகதி இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

You May also like