பிரதமர் மஹிந்த அவசரமாக சிங்கப்பூருக்கு விஜயம்;இரகசியம் இதுதான்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் வாரம் சிங்கப்பூருக்கு  விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

மருத்துவ தேவைக்காக அவர் இவ்வாறு சிங்கப்பூருக்கு செல்லவிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது வேறு இலங்கைப் பிரஜைகளையோ சிங்கப்பூர் அரசாங்கம் தற்போதைக்கு ஏற்பதாக இல்லை. கோவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை மீது சிங்கப்பூர் அரசாங்கம் பயணத்தடை விதித்திருக்கின்றது.

எனினும் நீண்டநாட்கள் இலங்கை – சிங்கப்பூர் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வெறும் ஐந்து பேருக்கு மாத்திரமே பிரவேசிப்பதற்கான அனுமதியை சிங்கப்பூர் வழங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது பணிக்குழு தலைவர் யோஷித்த ராஜபக்ஷ மற்றும் மூன்று பேர் அடுத்தவாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாகவும் தெரியவருகின்றது.

You May also like