கெரவலப்பிட்டி விவகாரம்- மகாநாயக்க தேரர்களிடம் முறையிட சஜித் முடிவு

கம்பஹா – கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் ஒருபகுதியை அமெரிக்காவுக்கு வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக மகாநாயக்க தேரர்களிடம் முறைப்பாடு செய்ய எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளார்.

இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீதப் பங்குகுளை அமெரிக்காவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதோடு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதாகவே தெரிவிக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில்,  நாளை மறுதினம் திங்கட்கிழமை மகாநாயக்க தேரர்களை சந்தித்து முறையிடவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை பெறவும் சஜித் தலைமையிலான குழுவினர் கண்டிக்கு விரையவுள்ளனர்.

You May also like