8 நாட்களில் 4784 கோடி ரூபாவை அச்சிட்டது அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கெபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியான கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கின்றார்.

கடந்த 08 நாட்களில் மாத்திரம் 4784 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக மேலும் பொருட்கள் சேவைகளின் விலைகள் விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

You May also like