பால்மா தட்டுப்பாடு மேலும் தொடரும் அறிகுறி!

பால் மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை எதிர்வரும் வாரம் தீர்வொன்றை வழங்காத பட்சத்தில், பால் மா விநியோகம் வழமைக்கு திரும்ப மேலும் ஒரு மாத காலம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பால் மாவை, விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அந்த பால் மா பழுதடையும் எனவும் அவர் கூறுகின்றார்.

பால் மாவிற்கு சந்தையில் 10 வீத கேள்வி தற்போது நிலவி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றமையினால், பல டொன் கணக்கான பால் மா துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு தேங்கியுள்ள கொல்கலன்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்

You May also like