அறிக்கை வரும்வரை லொஹான் மீது நடவடிக்கை இல்லை-SLPP

அநுராதபுரம் சிறைக்குள் சென்று தமிழ் அரசியல் கைதிகள் மீது துப்பாக்கி வைத்து அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் முதலில் அவர் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளிவர வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.

குறித்த அறிக்கை வெளிவர முன்னர் அவர் சார்ந்த நடவடிக்கை எதனையும் எடுக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இராஜாங்க அமைச்சர் லொஹான்  ரத்வத்த கைதிகளை மிரட்டியமை குறித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் குசலா கரோஜினி தலைமையிலான குழு கடந்த வாரம் அமைக்கப்பட்டிருந்தது.

தற்சமயம் குறித்த குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like