நாட்டை விட்டுச்செல்ல திசர பெரேரா தீர்மானம்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் திசர பெரேரா நாட்டை விட்டுச் செல்ல தீர்மானித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் கூறுகின்றன.

32 வயதான திசர பெரேரா, 2012ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்ததோடு, ஒருநாள் சர்வதேச மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், அமெரிக்கா தற்போது தமக்கான கிரிக்கெட் அணியை ஏற்பாடு செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You May also like