கொழும்பு தனியார் மருத்துவமனையில் குண்டு-முன்னாள் போராளி கைது

கொழும்பு நாரஹேன்பிட்டி லங்கா தனியார் மருத்துவமனையிலிருந்து மீட்கப்பட்ட குண்டு விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரும் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதுவரை 04 சந்தேக நபர்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதாகியிருக்கின்றனர்.

இறுதியாக கைது செய்யப்பட்டவர் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளி என்றும் தெரியவருகின்றது.

You May also like