கொழும்பில் பிரபல ஊடக நிறுவனத்திற்குள் அத்துமீறிய சிஐடி

குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக் குழுவொன்று கொழும்பிலுள்ள லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகையின் அலுவலகத்திற்கு விரைந்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளரான துஷான் குணவர்தனவினால் தெரிவிக்கப்பட்ட சதொச நிறுவன வெள்ளைப் பூண்டு மோசடி குறித்த செய்தி அண்மையில் குறித்த பத்திரிகையில் வெளிவந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த ஊடகவியலாளர்களுக்கு சி.ஐ.டி அழைத்த போதிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெறுமவின் தலையீட்டினைத் தொடர்ந்து விசாரணை நிறுத்தப்பட்டதாக அமைச்சர் டலஸ் இன்று நடந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

எனினும் இன்று நண்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவு குழு, கொழும்பு 02இல் உள்ள ஹுனுப்பிட்டியவில் அமைந்திருக்கும் லங்காதீப பத்திரிகை நிறுவனத் தலைமையகத்திற்கு விரைந்திருக்கின்றது.

இதன்போது, விசாரணைக்கு தற்போது சமூகமளிக்க முடியாதென்று பத்திரிகை ஆசிரியரால் வழங்கப்பட்ட பதிலைத் தொடர்ந்து குறித்த குழு அங்கிருந்து திரும்பியிருக்கிறது.

You May also like