இலங்கை தமிழ்ப் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய தூதுக்குழு சந்திப்பு

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை பற்றி பேச்சு நடத்த இலங்கைக்கு வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக் குழு, தமிழ்ப் பிரதிநிதிகளுடன் இன்று காலை சந்திப்புகளை நடத்தியிருக்கிறது.

இதன்படி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட தரப்பினரை கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் வைத்து தூதுக்குழு சந்தித்துள்ளது.

அதேவேளை, ஐரோப்பியத் தூதுக்குழுவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பு நடத்தப்படவுள்ளது.

இச்சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வெள்ளவத்தையிலுள்ள இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

You May also like